பொது இடத்தில் மது அருந்துவது கிரிமினல் குற்றமாக கருதும் மசோதாவை வடமாநில எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் சமர்ப்பித்துள்ளன.
எந்தவொரு பொது இடத்திலிருந்தும் 02 கிலோமீற்றர் சுற்றளவிற்குள் திறந்த வெளியில் மது அருந்துவது இவ்வாறு தடைசெய்யப்படும்.
எனினும், மசோதா விவாதத்தின் போது பல முன்மொழிவுகள் மற்றும் திருத்தங்கள் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, இந்த சட்ட திருத்தத்தின் மூலம் வடமாகாணத்தில் வன்முறைகள் அதிகரிக்கும் எனவும் ஒரு குழுவினர் எச்சரித்து வருகின்றனர்.
மதுபானச் சட்டங்கள் தளர்த்தப்பட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பூர்வீக மக்களிடையே அதிகரித்துவரும் அமைதியின்மையே இதற்குக் காரணம்.