Sportsஇந்திய அணியின் ரகசியத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய தேர்வு குழு தலைவர்

இந்திய அணியின் ரகசியத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய தேர்வு குழு தலைவர்

-

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா இருக்கிறார்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் தனியார் டெலிவிஷன் சேனல் நடத்திய ரகசிய ஸ்டிங் ஆபரேசனில் இந்திய அணி குறித்த பல்வேறு ரகசியங்களை வெளியிட்டுள்ளார். அவரது இந்த தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சேத்தன் சர்மா கசிய விட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே ஈகோ இருந்தது உண்மைதான். ரோகித் சர்மாவுக்கு கங்குலி ஆதரவாக செயல்பட்டார் என்று சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் விராட் கோலியையும், கங்குலிக்கு அவ்வளவாக பிடிக்காது.

தனது கேப்டன் பதவி பறிபோனதற்கு கங்குலி தான் காரணம் என்று கோலி நினைத்தார். அதே நேரத்தில் கங்குலிக்கு எப்போதுமே கோலியை பிடிக்காது. தொலைபேசி மூலம் நடந்த தேர்வு குழு சந்திப்பில் என்னோடு சேர்த்து மொத்தம் 9 பேர் பங்கேற்று இருந்தார்கள். 

அப்போது கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவு மறுபரிசீலனை செய்ய சொல்லி கங்குலி ஒரு முறை கேட்டுள்ளார். 

அதை கோலி கவனிக்காமல் விட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். நிருபர்கள் சந்திப்பின் போது கேப்டன் விலகல் முடிவை கங்குலி மறு பரிசீலனை செய்ய சொல்லவில்லை என்று கோலி பேசியிருந்தார். 

கோலி பொய் சொல்வதாக கங்குலி கூறினார். ஆனால் கோலி அப்படி சொன்னது ஏன் என்று இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை. 

20 ஓவர் அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவே விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் ஓய்வு கொடுத்தோம். 

20 ஓவர் அணியில் ரோகித் சர்மா இனி கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்படுவார். ஹர்த்திக் பாண்ட்யாவே கேப்டன் ஆவார். பும்ராவால் தனது முதுகை வளைக்க கூட முடியவில்லை. அவரை போன்ற காயம் அடைந்த சில வீரர்கள் தனியாக சில ஊசி எடுத்து கொண்டு முழு உடல் தகுதியுடன் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 

முழுமையாக உடல் தகுதி இல்லாத வீரர்கள் இப்படி ஊசி மருந்துகளை எடுத்து கொண்டு 80 சதவீத உடல் தகுதியுடன் ஆடி இருக்கிறார்கள். 

இந்திய அணியில் ரோகித் சர்மாவும், ஹர்த்திக் பாண்டியாவும் தான் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இருவரும் பலமுறை எனது

வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். இவ்வாறு சேத்தன் கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை காரணமாக சேத்தன் சர்மா மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...