Newsஇருளில் மூழ்கியது கியூபா - பொதுமக்கள் பெரும் அவதி

இருளில் மூழ்கியது கியூபா – பொதுமக்கள் பெரும் அவதி

-

கரிபீயன் தீவு நாடுகளில் ஒன்றான கியூபாவில் பெரும்பாலான மின் உற்பத்தி நிலையங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகின்றன. 

இதனால் அந்த மின்நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு நாடு தழுவிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் ஹவானாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கும் மடான்சாஸ் மாகாணத்தில் உள்ள மின் உற்பத்தி ஆலையில் பெரிய அளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 

இது மின் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக நாட்டில் உள்ள 15 மாகாணங்களில் 11 மாகாணங்களில் மின்வெட்டு ஏற்பட்டு இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. 

மின் வினியோகம் படிப்படியாக மீட்டமைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த 13-ம் திகதி கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ மின் இணைப்புகளை சேதப்படுத்தியதால் நாட்டின் அதிகமான பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நாயின் அளவுள்ள எலி

ஆஸ்திரேலியாவின் Normanby-இல் உள்ள ஒரு வீட்டில் நாயின் அளவுள்ள பெரிய எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எலியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. மேலும் இந்த...

விக்டோரியன் நீதித்துறை மீது கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்

Malmsbury இளைஞர் மையத்தில் நடந்த கலவரத்திற்கு விக்டோரியன் நீதி மற்றும் சமூக பாதுகாப்புத் துறையே காரணம் என்று WorkSafe குற்றம் சாட்டுகிறது. ஒக்டோபர் 2023 இல் நடந்த...

“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட iPhone” – டிரம்ப் எதிர்ப்பு

அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான சமீபத்திய iPhone-கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்று Apple தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகிறார். நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையை வெளியிடுவதற்காக நடைபெற்ற...

Online-இல் வெளியிடப்பட்ட வீடியோவால் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் கும்பல்

விக்டோரியாவில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்று கூறப்படும் ஒரு குழு, தங்கள் குறும்புத்தனங்களை ஆன்லைனில் வெளியிட்ட பின்னர், ரகசிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழு, லைக்குகள் மற்றும்...

எரிபொருள் விலை உயர்வால் குதிரையுடன் பயணம் செய்யும் விக்டோரியன் மனிதர்

விக்டோரியாவிலிருந்து பெட்ரோல் செலவுகளைச் சேமிக்க, தனது பயணத்திற்கு குதிரையைப் பயன்படுத்தும் ஒரு நபர் பற்றிய செய்திகள் வந்துள்ளன. மூன்று குழந்தைகளுக்கு தந்தையான லாரி ஓட்டுநரான Eathon White,...

Online-இல் வெளியிடப்பட்ட வீடியோவால் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் கும்பல்

விக்டோரியாவில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்று கூறப்படும் ஒரு குழு, தங்கள் குறும்புத்தனங்களை ஆன்லைனில் வெளியிட்ட பின்னர், ரகசிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழு, லைக்குகள் மற்றும்...