Breaking Newsதுரத்தும் துயரம் - துருக்கி-சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

துரத்தும் துயரம் – துருக்கி-சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

-

துருக்கியில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் இருந்தே மீளாத நிலையில், இப்போது அங்கு மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு துருக்கி – சிரியா எல்லையில் மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவானது.

அதிகாலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால்.. பொதுமக்களால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. அன்று மட்டும் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.

அதன் பின்னரும் கூட பல நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டன. இதன் காரணமாக அங்குப் பல கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. துருக்கி மட்டுமின்றி சிரியாவிலும் மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் பலரும் ஈடுபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை நிலநடுக்கம் காரணமாக சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் இன்னும் முடியாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இப்போது துருக்கியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் இரண்டு கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவானதாகவும் ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest news

வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கவுள்ள பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய வங்கி டெபாசிட்களை திரும்பப் பெறுவதற்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, எதிர்காலத்தில், Bendigo வங்கி கிளை கவுண்டரில் இருந்து...

எடையைக் குறைக்க AI ஐப் பயன்படுத்துவதற்கான வழியை கண்டுபிடித்துள்ள ஆஸ்திரேலியா

எடையைக் குறைக்கும் செயல்பாட்டில் AI தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த முடியும் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு அடையாளம் கண்டுள்ளது. "My Journey" என்று அழைக்கப்படும் இந்த AI...

வேலை தேடும் விக்டோரியர்களுக்கு மற்றொரு புதிய சேவை

வேலை தேடும் விக்டோரியர்களுக்கு ஆதரவை வழங்க புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. "Jobs Victoria" என்ற இந்த சேவையின் மூலம் விக்டோரியர்களுக்கு இலவச ஆதரவை வழங்குவதும் சிறப்பம்சமாகும். இதன் கீழ்...

உலகின் சிறந்த கடற்கரைகளில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய கடற்கரைகள்

இந்த ஆண்டு, உலகின் சிறந்த கடற்கரைகளை Lonely Planet எனும் நிறுவனம் தரவரிசைப்படுத்தியுள்ளது. அதன்படி, 2025-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள Whitehaven கடற்கரை உலகின் சிறந்த கடற்கரையாக...