டாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள பழ பண்ணைகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிரேட் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 16 சிறப்பு ரோபோக்களைப் பயன்படுத்தி பழங்களை பறிக்கும் முன்னோடி திட்டம் ஏற்கனவே நடந்து வருகிறது.
ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பெர்ரிகளை அறுவடை செய்வதில் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் ஒரு நிமிடத்தில் 4 ஸ்ட்ராபெர்ரிகளை அறுவடை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
எனினும், இதன் மூலம் பழம் பறிக்கும் தொழிலில் ஈடுபடுவோரின் வேலைகள் மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.