ஐ.பி.எல். 2023 கிரிக்கெட் போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைவராக தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் மார்க்ரம் இன்று(23) நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா T20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் தலைவராக மார்க்ரம இருந்தவர்.
இதன் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என பலவீனமான அணியாகவே அந்த அணி கருதப்பட்டது.
இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி வெளியேறினார். அதன் பிறகு பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.
28 வயதான மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
நன்றி தமிழன்