News3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவைசிகிச்சை

3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவைசிகிச்சை

-

இஸ்ரேலில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டவரின் மண்டை ஓட்டைக் கொண்டு, அப்போதே மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆதாரங்களை சேகரித்த தொல்லியல் துறையினர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சி.என்.என் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஒரு நபரின் மண்டை ஓடு, அதன் கீழே இருக்கும் திசுக்கள் சேதம் அடையாமல் உடைத்தெடுக்கப்பட்டிருப்பதை ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன.

கி.மு 1550 முதல் கி.மு 1450 ஆண்டு காலத்துக்குள் இந்த சகோதரர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. டெல் மெகிடோவில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் இவர்களது உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

அதில், மூத்த சகோதரர் வயது 20 முதல் 40க்குள் இருக்கலாம். அவரது மண்டை ஓட்டில் மூளை அறுவைசிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதாவது, மண்டை ஓட்டில் ஒரு சதுரமான எலும்புப் பகுதி கூர்மையான ஆயுதத்தால் மிகக் கச்சிதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகியிருப்பதாக விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.

ஒரு மனித எலும்புக் கூடு கிடைத்தால், அதன் வாழ்முறை மட்டுமே கண்டுபிடிக்க இயலும். ஆனால் இந்த மனித எலும்பு மூலம், ஒரு மிகப்பெரிய நிகழ்வு கண்டறியப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

சிதைந்த “Via Sistinaவின்” மெல்போர்ன் கோப்பை நம்பிக்கைகள்

இந்த ஆண்டு மெல்போர்ன் கோப்பையில் Via Sistina குதிரை போட்டியிடாது என்று உரிமையாளர் "Yulong invesment" அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை Moonee Valley-ல் நடைபெற்ற "Cox plate"...

வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – அமெரிக்க தேர்தலில் பரபரப்பு!

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தபால் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மர்மமான 10 இடங்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள மர்மமான 10 இடங்கள் பற்றிய புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. பகலில் சாதாரண வீடு அல்லது இடமாக இருந்தாலும், அதன் பூசப்பட்ட வண்ணங்கள், பிற வெளிப்புற...

விண்வெளியிலிருந்து வந்த தீபாவளி வாழ்த்து !

பூமிக்கு அப்பால் விண்வெளியில் இருந்தவாறு பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பூமிக்கு வெளியே சுமார் 260 மைல் தொலைவிலிருந்து தீபாவளி...

விண்வெளியிலிருந்து வந்த தீபாவளி வாழ்த்து !

பூமிக்கு அப்பால் விண்வெளியில் இருந்தவாறு பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பூமிக்கு வெளியே சுமார் 260 மைல் தொலைவிலிருந்து தீபாவளி...

வறண்ட காலநிலைக்கு தயாராகுமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் காலங்களில் அவுஸ்திரேலியாவின் 02 மாகாணங்களில் கடுமையான வறண்ட காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்கள் வரும்...