Newsஅமெரிக்காவில் பனிப்புயல் - பல நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு

அமெரிக்காவில் பனிப்புயல் – பல நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு

-

உலகில் காலநிலை புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் வேகமாக மாறி வருகின்றது. 

பல நாடுகளில் இதன் விளைவாக வெயில், குளிர், மழை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக அமெரிக்கா காலநிலை மாற்றத்தால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பனிப்புயல் அமெரிக்க மாகாணங்களை பந்தாடியது. 

இந்த புயலால் டஜன் கணக்கானோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பனிப்புயலால் அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்தன. 

இந்த நிலையில், அமெரிக்காவின் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் வீசி வரும் பயங்கர பனிப்புயல் அந்த மாகாணத்தையை புரட்டிப்போட்டுள்ளது.

குறிப்பாக அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.புயல் காரணமாக மாகாணம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவுடன், மழையும் கொட்டி வருகின்றது.

இதனால் சாலைகள், வீதிகளெங்கும் பனித்துகள்கள் பல அடி உயரத்துக்கு குவிந்து கிடக்கின்றன. மேலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அதேபோல் ரெயில் வழித்தடங்களிலும் பனித்துகள்கள் மலைபோல் குவிந்து கிடப்பதால் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புயலின் போது ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பனிப்புயல் காரணமாக கலிபோர்னியா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுலா நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரங்கள் அதிக போக்குவரத்து நெரிசலால் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன. Dunsborough மற்றும் Busselton போன்ற நகரங்களில் உள்ள கடற்கரைகள்...

மீண்டும் மோசமடைந்து வரும் Bondi நாயகனின் உடல்நிலை

Bondi ஹீரோ அகமது அல்-அஹ்மத் அமெரிக்காவில் மீண்டும் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காகவும், பல கௌரவ விருது விழாக்களில் கலந்து கொள்வதற்காகவும் நியூயார்க்கிற்குச்...

மீண்டும் மோசமடைந்து வரும் Bondi நாயகனின் உடல்நிலை

Bondi ஹீரோ அகமது அல்-அஹ்மத் அமெரிக்காவில் மீண்டும் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காகவும், பல கௌரவ விருது விழாக்களில் கலந்து கொள்வதற்காகவும் நியூயார்க்கிற்குச்...

காவல்துறையினரைத் தாக்கியதற்காக இளைஞர் ஒருவர் கைது

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Bawley கடற்கரையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்திய 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் நிர்வாணமாக...