Australia Post-ஐ மறுஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏனெனில், 2015-க்குப் பிறகு முதல் முறையாக இந்த நிதியாண்டில் நஷ்டம் ஏற்படும் என்று கணித்துள்ளனர்.
பார்சல் போக்குவரத்தில் Australia Post லாபம் ஈட்டினாலும், கடிதம் விநியோகத்தில் அதிக நஷ்டத்தை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2007-08 காலகட்டத்தை கருத்தில் கொண்டு, Australia Post மூலம் விநியோகிக்கப்படும் கடிதங்களின் எண்ணிக்கை 66 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தகவல்தொடர்புகளின் அதிகரிப்பு காரணமாக, 2032 ஆம் ஆண்டளவில், ஆஸ்திரேலிய குடும்பங்கள் வாரத்திற்கு ஒரு கடிதம் கூட பெற மாட்டார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில், கடித விநியோகத்தில் Australia Post 189 மில்லியன் டொலர் நட்டத்தை பதிவு செய்திருந்தது.