News25 போர் விமானங்களை அனுப்பிய சீனா - தாய்வான் எல்லையில் போர்...

25 போர் விமானங்களை அனுப்பிய சீனா – தாய்வான் எல்லையில் போர் பதற்றம்!

-

1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தாய்வானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றது. 

இந்த சூழலில் சமீபகாலமாக தாய்வானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகின்றது. சீனாவுக்கு கடும் கோபத்தை அமெரிக்கா ஏற்படுத்தி வருகின்றது. 

இதனால் ,தேவை ஏற்பட்டால் தாய்வான் மீது படையெடுத்து அதனை ஆக்கிரமிப்போம் என சீனா மிரட்டி வருகின்றது. 

இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே இருநாடுகளுக்கும் இடையே கடுமையான போர்ப்பதற்றம் நீடித்து வருகின்றது. 

இந்த நிலையில் தாய்வானை மிரட்டும் விதமாக சீனா நேற்று 25 போர் விமானங்களை தாய்வான் எல்லைக்குள் அனுப்பியது. 

இது குறித்து தாய்வான் இராணுவ அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், 

‘இன்று காலை 6 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்குள் சீன இராணுவத்துக்கு சொந்தமான குண்டுவீச்சு விமானங்கள் உள்பட 25 போர் விமானங்கள் தைவானுக்குள் அத்துமீறி ஊடுருவின. 

மேலும் 3 போர்க்கப்பல்களும் தைவானின் நீர்பரப்புக்குள் நுழைந்தன.

அதை தொடர்ந்து நிலைமையை கண்காணிக்க தாய்வான் இராணுவம் போர் விமானங்களையும், போர் கப்பல்களையும் அனுப்பி வைத்தது’ என கூறப்பட்டுள்ளது. 

சீனாவின் இந்த அடாவடியால் இருநாடுகளுக்கு இடையில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது

Latest news

திரும்ப அழைக்கப்படும் பிரபல DVD Player

ஆஸ்திரேலியாவில் உள்ள JB Hi-Fi ஸ்டோர்களில் விற்கப்படும் அனைத்து Ayonz Dual Screen Portable DVD Playersஐ மீண்டும் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றின்...

தனது உலக சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார் எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் மேலும் பணக்காரர் ஆனார். அதாவது மஸ்க்கின் நிகர மதிப்பு 347.8 பில்லியன் டாலர்கள் ஆகும். Bloomberg Billionaires Index படி,...

குயின்ஸ்லாந்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று (23) காலை திடீர் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரிஸ்பேனுக்கு வடக்கே உள்ள சவுத் மிஷன் கடற்கரையில்...

3G நிறுத்தப்பட்டதால் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய முதியவர்கள்

கடந்த மாதம் முதல் அவுஸ்திரேலியாவின் 3G வலையமைப்பு முற்றாக முடக்கப்பட்டதன் காரணமாக, பழைய மற்றும் தொலைதூர பிராந்திய பகுதிகளில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான அவுஸ்திரேலியர்கள் பிரச்சினைகளை...

எதிர்காலத்தில் மெல்பேர்ணில் மலிவு விலை வீடுகள் கிடைக்காது

ஆஸ்திரேலியாவின் பல தலைநகரங்களில் வீட்டு வாடகைக் கட்டணம் சாமானியர்களுக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையால் நலன் பெறுவோர், குறைந்தபட்ச ஊதியத் தொழிலாளர்கள் மற்றும் ஒற்றை...

Babysitter-களை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தல்!

3 வயது குழந்தையை சரியாக பராமரிக்காத 18 வயது குழந்தை பராமரிப்பு ஊழியர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அடிலெய்டில் உள்ள ஒரு வீட்டில் மூன்று...