குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இளைஞர்களின் குற்றங்களை குறைக்க 25 மில்லியன் டாலர் செலவில் புதிய போலீஸ் நடவடிக்கையை செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர்.
உணவகங்கள் – சில்லறை விற்பனைக் கடைகள் – உரிமம் பெற்ற மதுபானக் கடைகளில் ஏற்படும் மோதல்களை முடிந்தவரை குறைப்பதே இதன் நோக்கம்.
கடந்த டிசம்பரில் சோதனை முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன் வெற்றியின் அடிப்படையில் 02 வருட நிரந்தர வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என குயின்ஸ்லாந்து மாநில அரசு அறிவித்துள்ளது.
பல குயின்ஸ்லாந்து நகரங்களில் வன்முறை சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





