தொழிலாளர்கள் பற்றாக்குறையால், மேற்கு ஆஸ்திரேலியாவில் வணிகம் மூடப்படுவதும், செயல்பாடுகள் நிறுத்தப்படுவதும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
உணவகங்கள் – சில்லறை விற்பனைக் கடைகள், பண்ணைகள் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள வணிக இடங்களும் இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலை கிட்டத்தட்ட ஒவ்வொரு பிராந்திய பகுதிகளிலும் குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், கோவிட் தொற்றுநோயுடன் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய பெரும்பாலான வெளிநாட்டு தொழிலாளர்கள் நாடு திரும்பவில்லை.
கடந்த வருடங்களில் கிறிஸ்மஸ் மற்றும் ஈஸ்டர் காலங்களில் கூட திறக்கப்பட்டிருந்த பல உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிலாளர் பற்றாக்குறையை போக்க சர்வதேச மாணவர்களுக்கும், பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டாலும், இந்த நடவடிக்கைகள் இதுவரை வெற்றியடையவில்லை என்பது உறுதியாகியுள்ளது.





