Newsதனது 5 குழந்தைகளை கொன்ற தாய் கருணைக்கொலை

தனது 5 குழந்தைகளை கொன்ற தாய் கருணைக்கொலை

-

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த  58 வயதான ஜெனிவில் லெர்மிட் என்ற பெண் நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி தனது 5 குழந்தைகளையும் கொலை செய்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

3 முதல் 14 வயது வரை உள்ள ஒரு மகன் மற்றும் 4 மகள்களை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த  பின்னர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

5 குழந்தைகளை கொன்ற ஜெனிவில் லெர்மிட்டுக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் 2019-ம் ஆண்டு மனநல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவில் லெர்மிட் கோரிக்கை விடுத்தார். பெல்ஜியத்தில் தாங்க முடியாத உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டால் கருணைக்கொலை முடிவை ஒரு நபர் தேர்ந்தெடுக்க அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது.

கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த ஜெனிவில் லெர்மிட் கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது சட்டத்தரணி நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘ஜெனிவில் லெர்மிட், அவர் செய்த கொலைகளின் 16-வது நினைவு நாளில் அவரது விருப்பத்தின்படி கருணைக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பல்வேறு கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகே  அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார்’ என்றார்.

இவ்வழக்கு விசாரணையின் போது, ஜெனிவில் லெர்மிட் மனநல வைத்தியரை தவறாமல் சந்தித்து வந்தார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் சிறைக்கு அனுப்பக்கூடாது என்றும் அவரது சட்டத்திரணிகள் வாதிட்டனர். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...