தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கத்தால் ஆஸ்திரேலியர்களின் மனநலம் குறைந்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
46 சதவீத ஆஸ்திரேலியர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் தங்களின் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
கடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 வீத அதிகரிப்பாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
23 சதவீதம் பேர் வீட்டு விலையால் மன அழுத்த சூழ்நிலை அதிகரித்துள்ளதாகவும், 21 சதவீதம் பேர் வேலையில்லா திண்டாட்டத்தால் தங்களின் மன அழுத்த நிலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் நியூ சவுத் வேல்ஸில் 5 சதவீதமும், விக்டோரியாவில் 9 சதவீதமும் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று காட்டுகிறது.