நுகர்வோரை தவறாக வழிநடத்துவதை தவிர்க்கவும் ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் 3 முக்கிய மின் சாதன விற்பனை வணிக வலையமைப்புகளை எச்சரித்துள்ளது.
இந்த அறிவிப்பு Harvey Norman, JB Hi-Fi மற்றும் The Good Guys ஆகியவற்றிற்கு refund, replacement, repair ஆகிய 3 துறைகள் தொடர்பாக செய்யப்பட்டுள்ளது.
உத்தரவாதக் காலத்தின் போது ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சம்பந்தப்பட்ட வணிக வலையமைப்புகள் நுகர்வோரை தவறாக வழிநடத்தியதாக நுகர்வோர் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன.
மேலும் பெரும் தள்ளுபடி காலத்துக்கு முன்னரே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதும் சிறப்பு.
தற்போதுள்ள சட்டங்களின்படி இந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது என்றும் எச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும் என்றும் ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் வலியுறுத்துகிறது.