Newsலோகோவை மாற்றியது NOKIA நிறுவனம்

லோகோவை மாற்றியது NOKIA நிறுவனம்

-

நோக்கியா நிறுவனத்தின் 60 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தனது அடையாளத்தை மாற்ற முடிவு செய்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து நோக்கியாவின் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டெலிகாம் உபகரணங்கள் உற்பத்தியாளர் பிரிவில் தொடர் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில், நோக்கியா இந்த முடிவை எடுத்துள்ளது.

புதிய லோகோ ஐந்து வெவ்வேறு வடிவங்கள் இணைந்து நோக்கியா எனும் வார்த்தையை பிரதிபலிக்கிறது. பாரம்பரியம் மிக்க புளூ நிற பழைய லோகோவுக்கு மாற்றாக புதிய லோகோவில் தேவைக்கு ஏற்ப அதிக நிறங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

“ஸ்மார்ட்போன்களிடம் அதிக ஒருங்கிணைப்பு இருந்து வந்தது, எனினும், தற்போதைய காலக்கட்டத்தில் நாங்கள் வியாபார தொழில்நுட்ப நிறுவனம்,” என தலைமை அதிகாரி பெக்கா லுண்ட்மார்க் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

2020 ஆண்டு வாக்கில் தடுமாற்றத்தில் இருந்துவந்த நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட லுண்ட்மார்க் ரிசெட், அக்செல்லரேட் மற்றும் ஸ்கேல் என மூன்று நிலைகள் அடங்கிய வியூகத்தை வகுத்து நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.

இவற்றில் ரிசெட் நிலை முடிவுக்கு வருவதை அடுத்து, இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பித்து இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். தற்போது சேவை வழங்கும் வியாபார பிரிவில் டெலிகாம் நிறுவனங்களுக்கு உபகரணங்களை விநியோகம் செய்து வரும் நோக்கியா, தொடர்ந்து வியாபாரங்களுக்கு உபகரணங்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

Latest news

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...

தனது உலக சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார் எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் மேலும் பணக்காரர் ஆனார். அதாவது மஸ்க்கின் நிகர மதிப்பு 347.8 பில்லியன் டாலர்கள் ஆகும். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி,...

திரும்ப அழைக்கப்படும் பிரபல DVD Player

ஆஸ்திரேலியாவில் உள்ள JB Hi-Fi ஸ்டோர்களில் விற்கப்படும் அனைத்து Ayonz Dual Screen Portable DVD Playersஐ மீண்டும் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றின்...

திரும்ப அழைக்கப்படும் பிரபல DVD Player

ஆஸ்திரேலியாவில் உள்ள JB Hi-Fi ஸ்டோர்களில் விற்கப்படும் அனைத்து Ayonz Dual Screen Portable DVD Playersஐ மீண்டும் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றின்...

குயின்ஸ்லாந்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று (23) காலை திடீர் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரிஸ்பேனுக்கு வடக்கே உள்ள சவுத் மிஷன் கடற்கரையில்...