குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் உணவுக்காக விற்கப்பட்ட ஒரு வகை காளான் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இது லிஸ்டீரியா பாக்டீரியாவின் ஆபத்து காரணமாகும்.
கர்ப்பிணிப் பெண்கள் – முதியவர்கள் – நோய் எதிர்ப்புச் சிக்கல் உள்ளவர்கள் இந்தக் காளான்களை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கேள்விக்குரிய காளான் (K-mama Enoki Mushrooms – 300g) தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவற்றை சாப்பிட்டவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.