உலகின் சிறந்த காற்றின் தரம் கொண்ட 13 நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது.
காற்றின் தர நிலைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள குறிகாட்டிகளின்படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
131 நாடுகளில், ஆஸ்திரேலியா – எஸ்டோனியா – பின்லாந்து – கிரெனடா – ஐஸ்லாந்து – நியூசிலாந்து உள்ளிட்ட 13 நாடுகள் மட்டுமே அந்த குறியீட்டின் குறிப்பிட்ட குறிகாட்டிகளுக்கு மேல் உள்ளன.
இந்தியா – சாட் – ஈராக் – பாகிஸ்தான் – பஹ்ரைன் – வங்கதேசம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் மிகக் குறைந்த இடங்களைப் பிடித்துள்ளன.
முக்கிய நகரங்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ரா சிறந்த காற்றோட்டமான நகரமாக பெயரிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குவாரி மற்றும் சுரங்க தொழில்கள் உள்ள பகுதிகளில் அதிக அளவில் காற்று மாசு இருப்பதாக இங்கு குறிப்பிடப்பட்டது.