Newsகனடாவில் கோர விபத்தில் இருவர் பலி

கனடாவில் கோர விபத்தில் இருவர் பலி

-

கனடாவின் கியூபெக் மாகாணம் ஆம்கி நகரத்தில் நேற்று முன்தினம் சாலையோரம் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து கியூபெக் மாகாணம் ஆம்கி நகரத்தில் சிலர் சாலையோரம் நடந்து சென்றுளளனர். அப்போது அந்த வழியாக வந்த லொரி ஒன்று திடீரென சாரதி கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பின்னர் அங்கு சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியுள்ளது. 

இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இந்த விபத்தினை ஏற்படுத்திய லொரி சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...