ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய கார் இழப்பீடு வழக்கு தொடங்கியது.
இந்த வழக்கு 2014-2020 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் மற்றும் கியா கார்களில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது.
இயந்திரக் கோளாறு மற்றும் தீ விபத்துகளே இதற்குக் காரணம் என பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வாகனங்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்த போதிலும், நுகர்வோர் என்ற வகையில் தமக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பெரும் தொகை இழப்பீடு கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மே 19ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு ஹூண்டாய் நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.