நியூசிலாந்து நாடு பல தீவு கூட்டங்களை உள்ளடக்கி இருக்கின்றது. நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை கூட, நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
நன்றி தமிழன்