Newsஈரான் சிறையில் சிறுமிகள் துஷ்பிரயோகம் - வெளியான அதிர்ச்சி தகவல்

ஈரான் சிறையில் சிறுமிகள் துஷ்பிரயோகம் – வெளியான அதிர்ச்சி தகவல்

-

ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் திகதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி பொலிஸார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட மாஷா அமினியை பொலிஸார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா செப்டம்பர் 16-ம் திகதி உயிரிழந்தார். 

இதனையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் மாத கணக்கில் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் வெற்றியாக இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தும் ‘அறநெறி பொலிஸ்’ பிரிவை ஈரான் கலைத்துள்ளது.

அதேவேளை, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கியதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அதில் சிலருக்கு ஈரான் அரசாங்கம் தூக்கு தண்டனையையும் நிறைவேற்றியுள்ளது.

அவர்களில் பலர் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்ட 22 ஆயிரம் பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிறுவர், சிறுமிகளிடம் இருந்து உண்மைகளை வரவழைக்கிறோம் என்று கூறி, கொடூர சித்ரவதைகள் நடந்து வருகின்றன என ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் என்ற மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. 

இதன்படி, இராணுவத்தினரிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட 12 வயது உடைய சிறார்கள் முதற்கொண்டு இந்த கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். 

அவர்கள் மீது ஈரான் உளவு அமைப்பு மற்றும் பாதுகாப்பு வீரர்கள் அடித்து, துன்புறுத்துதல், மின்சார அதிர்ச்சி கொடுத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பிற பாலியல் வன்முறைகள் ஆகியவை நடத்தப்படுகின்றன. 

ஈரானின் புரட்சிகர படைகளும் மற்றும் பசிஜ் என்ற துணை இராணுவ படையினரும் கூட இந்த சித்ரவதை செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இவர்களில் 2 சட்டத்தரணிகள் மற்றும் 17 வயதுக்கு வந்தோர்கள் என நேரடி சாட்சியாக உள்ள 19 பேரிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்தும் சித்ரவதை பற்றிய பரவலான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என அந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது என சி.என்.என். தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் 25 மாகாணங்களில், 5 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு மர்ம முறையில் விஷம் கொடுக்கப்பட்டு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் வெளிவந்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

ஈரானின் தலைவர் அயோத்துல்லா அலி காமினேனி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், இதனை மன்னிக்க முடியாத குற்றம் என்றும் இரக்கமின்றி விசாரணை நடத்துங்கள் என்றும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

நன்றி தமிழன்

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...