குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் தாமதங்கள் டிசம்பரில் சிறிது குறைந்துள்ளன.
அதன்படி, ஆம்புலன்ஸ் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் நோயாளிகள் காத்திருப்பது குறைந்துள்ளது.
இதேவேளை, தெற்கு அவுஸ்திரேலியாவில் புதிதாக 05 அவசர சிகிச்சை சேவை நிலையங்களை நிறுவ மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த கூட்டாட்சித் தேர்தலின் போது தொழிலாளர் கட்சி அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து நிறுவப்படும் 50 அவசர சிகிச்சை மையங்களில் இவையும் அடங்கும்.
இந்த மையங்கள் வாரத்தில் 7 நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுவதால் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.