புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதிக்க ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் ஆதரவைப் பெற அமெரிக்க பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிட்னியை தளமாகக் கொண்ட நிறுவனம் மணிக்கு 6,174 முதல் 8,600 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட மறுபயன்பாட்டு விமானத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது போன்ற ஒரு விமானம் சிட்னியில் இருந்து பெர்த் சென்று 6,580 கிமீ தூரம் பயணிக்க ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும்.
ஆரம்பகட்ட சோதனைகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துடன் ரஷ்யாவும் சீனாவும் மற்றொரு போர் விமான திட்டத்தையும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.