Cinemaரஜினிக்கு பதிலாக சிம்பு

ரஜினிக்கு பதிலாக சிம்பு

-

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வெளியாக தயாராகி வரும் படம் “பத்து தல”. இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கியுள்ளார். 

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சிம்பு உடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

நடிகை சாயிஷா ஒரு பாட்டுக்கு நடனமாடி உள்ளார். இந்த படத்தில் ஏ.ஜி.ஆர் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் ரஜினிகாந்தை தான் அணுகினார்களாம். ஆனால் அவர் இது ரீமேக் படம் என கூறி நடிக்க மறுத்துவிட்டாராம்.

அதன் பின்னர் தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு சிம்புவிற்கு சென்றது என படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

பத்துதல திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. சிம்பு நடித்த படங்களிலேயே இந்த பட டிரைலருக்கு தான் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

மிகவும் திருப்தியான வாடிக்கையாளர் விருதை வென்ற சூப்பர் மார்க்கெட்

ஆஸ்திரேலியாவின் விருப்பமான பல்பொருள் அங்காடியாக Aldi மீண்டும் ஒருமுறை வாடிக்கையாளர்களால் மகுடம் சூட்டப்பட்டுள்ளது. Aldi தொடர்ந்து எட்டாவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு முக்கிய...

ஒரு பெரிய ஆஸ்திரேலிய வங்கியிடமிருந்து சாதனை லாபம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கடன் மற்றும் வைப்பு நிறுவனமான Commonwealth வங்கி, 2024/25 நிதியாண்டில் ஆண்டுக்கு $10.25 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு வீட்டு உரிமையாளர்கள் மற்றும்...

விக்டோரியாவில் கார் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். புதன்கிழமை மாலை 6 மணியளவில் Moe-இல் உள்ள Lloyd தெருவிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. இன்னும்...

Perisher Ski Resort-இல் உயிரிழந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்

Southern Hemisphere Winter-இற்காக ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் அமெரிக்கர் ஒருவர் Perisher Ski Resort-இல் ஏற்பட்ட விபத்தில் கொல்லப்பட்ட பனிச்சறுக்கு வீரர் என பெயரிடப்பட்டுள்ளார் . Jindabyne-இற்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள NSW...

Perisher Ski Resort-இல் உயிரிழந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்

Southern Hemisphere Winter-இற்காக ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் அமெரிக்கர் ஒருவர் Perisher Ski Resort-இல் ஏற்பட்ட விபத்தில் கொல்லப்பட்ட பனிச்சறுக்கு வீரர் என பெயரிடப்பட்டுள்ளார் . Jindabyne-இற்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள NSW...

NSW தெற்கு கடற்கரையில் மின்தடையால் பாதிக்கப்பட்ட Telstra வாடிக்கையாளர்கள்

நியூ சவுத் கோஸ்ட்டில் 100,000க்கும் மேற்பட்ட சேவைகள் பெரிய அளவிலான மின்தடையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, Telstra சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று மதியம் 1.45 மணியளவில், ஒரு...