அவுஸ்திரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 1.7 மில்லியன் டொலர்களை மோசடி செய்த சைபர் குற்றங்களில் 04 சந்தேக நபர்களை அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜனவரி 2020 முதல் இந்த மாதம் வரை 15க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்களை அவர்கள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 80 வங்கிக் கணக்குகள் மூலம் அவர்கள் இந்தக் குற்றங்களைச் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களில், பிரிஸ்பேனில் வசிப்பவர்கள் இருவர் மற்றும் மெல்போர்ன் மற்றும் அடிலெய்டில் இருந்து தலா ஒருவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து ஏராளமான போலி பாஸ்போர்ட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 60 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.