குயின்ஸ்லாந்தின் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள குயில்பி ஷைர் என்ற சிறிய நகரத்தின் அதிகாரிகள், தங்கள் நகரத்தில் வந்து குடியேறுபவர்களுக்கு $20,000 செலுத்த முடிவு செய்துள்ளனர்.
பிரிஸ்பேனில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரத்தில் தற்போது சுமார் 650 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
குயில்பி ஷைர் நகர அதிகாரிகள் அங்கு வந்து குடியேற விரும்புபவர்களுக்கு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தத் தொகை வழங்கப்படும் என்று முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, இந்த தொகையை நிலம் வாங்க – வீடு கட்டி அதில் வசிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
குயில்பி ஷையரில் ஒரு சராசரி நிலத்தின் மதிப்பு சுமார் $20,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகையை அதிகரிக்கவும், வேலைக்காக வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.