இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன் அடிப்படையில், நாட்டின் மக்கள் தொகைக்கான பல்வேறு துணைப்பிரிவில் தேசிய புள்ளி விவரங்களுக்கான அலுவலகம் பகுப்பாய்வு செய்து தகவல்களை வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில், வீடு, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி மூலம் மதம் என்ற தலைப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரோக்கியம் என எடுத்துக்கொண்டால் ஒட்டு மொத்தமாக 82 சதவீதத்தினர் நன்றாக உள்ளனர். ஆனால் இந்துக்களில் இந்த ஆரோக்கிய விகிதம் 87.8 சதவீதமாக உள்ளது.
ஒட்டு மொத்த கல்வி விகிதத்தில், நிலை 4 மற்றும் அதற்கு மேலும் (சான்றிதழ் நிலை) படித்தவர்கள் எண்ணிக்கை 33.8 சதவீதம் ஆகும். ஆனால் இந்துக்களில் இது 54.8 சதவீதம் ஆகும்.
நன்றி தமிழன்