குயின்ஸ்லாந்து மாநில அரசு இனவெறி கருத்துக்கள் மற்றும் சின்னங்களை பரப்புவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் கடுமையான சட்டங்களை விதிக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, நாஜிக் கொடிகள் மற்றும் சின்னங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான பிரேரணை இன்று அரச பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இனவெறிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஒரு மாநிலம் இயற்றிய சட்டங்களின் மிகக் கடினமான தொகுப்பாக இது இருக்கும் என்று மாநிலப் பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்கள் மூலம் தொடர்புடைய சின்னங்களை விளம்பரப்படுத்துவதும் இதன் கீழ் தடைசெய்யப்படும்.
விக்டோரியா உட்பட பல மாநிலங்கள் ஏற்கனவே ஸ்வஸ்திகா உள்ளிட்ட நாஜி சின்னங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டங்களை இயற்றியுள்ளன.