பல முக்கிய பிரச்சனைகளால் ஆஸ்திரேலியWine தொழில்துறையின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனச் சந்தையின் இழப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் திராட்சை அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளமை முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
2022-23 நிதியாண்டில் ஒயினுக்காக உற்பத்தி செய்யப்படும் திராட்சைப்பயிரின் மதிப்பு 749 மில்லியன் டாலராக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டைக் காட்டிலும் வருவாயில் சுமார் 32 சதவீதம் குறைவு.
இருப்பினும், 2023-24 ஆம் ஆண்டில் இந்த மதிப்பு 834 மில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2020 முதல் ஆஸ்திரேலிய Wine மீது சீனா விதிக்கும் அதிகபட்ச 218 சதவீத வரியால் நாட்டின் Wine தொழில்துறையும் தடைபட்டுள்ளது.