Sportsமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் - IPL...

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் – IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டி பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்றது.

இதில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

அந்த வகையில், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணியின் திலக் வர்மா 46 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காமல் ) குவித்தார். பெங்களூரு அணி சார்பில் கரண் சர்மா 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து ,172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூ பிளசிஸ் ஜோடி அதிரடியில் இறங்கியது. பந்துகள் சிக்சர், பவுண்டரிகளாக பறந்தன.

இருவரும் அரை சதமடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு விராட் கோலி, டூ பிளசிஸ் ஜோடி 148 ஓட்டங்கள் குவித்தது.

டூ பிளசிஸ் 73 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில், பெங்களூரு அணி 172 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

விராட் கோலி 49 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உட்பட82 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...

புதுப்பிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா-சீனா கல்வி உறவுகள்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் தங்கள் கல்வி கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தில் நுழைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சமீபத்தில் ஒரு...

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை – பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்த ஆஸ்திரேலிய குடும்பம்

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்ததை அடுத்து ஆஸ்திரேலியாவில் பிரபலமான குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பதின்ம...

வீட்டு வன்முறைக்கு எதிராக மெல்பேர்ண் புதிய நடவடிக்கை

குடும்ப வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கான தேசியத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை காரணமாக 23 வயது பெண் ஒருவர் இறந்தது தொடர்பான விசாரணை...

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை – பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்த ஆஸ்திரேலிய குடும்பம்

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்ததை அடுத்து ஆஸ்திரேலியாவில் பிரபலமான குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பதின்ம...