தெற்கு ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையால் ஆம்புலன்ஸ்கள் சாலையில் அதிக நேரம் செலவழிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3,855 மணிநேரமாக பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் 3,968 மணிநேரமாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதாரத்துறையில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இந்த நேரம் அதிகரிக்கும் என்றும் மாநில எதிர்க்கட்சி எச்சரிக்கிறது.
நோயாளியின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நிலைமை மிகவும் சாதகமாக இல்லை என்று தெற்கு ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி வலியுறுத்துகிறது.
இருப்பினும், ஆம்புலன்ஸ் தொடர்பான பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என மாநில அரசு கூறுகிறது.