பழங்குடியின மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் அரசியல் விளையாடுவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த பிரேரணைக்கு எதிராக லிபரல் எதிர்கட்சி கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் எடுத்த தீர்மானத்திற்கு வருந்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும், இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் மக்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நம்புகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கான்பெராவில், பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரும் முன்மொழிவை உத்தியோகபூர்வமாக எதிர்ப்பதாக அறிவித்தார், ஆனால் பின்வரிசை எம்.பி.க்கள் சுதந்திரமாக முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.
தொழிலாளர் கட்சி அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணையானது பழங்குடியின மக்களின் உரிமைகளை போதியளவு பாதுகாக்கவில்லை என்பதே லிபரல் கட்சியின் நிலைப்பாடாகும்.