சென்னையில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தில் தமிழ் கலாசாரம், கோலம் போன்ற பாரம்பரிய நடைமுறைகள், சேலை, கோவில்கள் மற்றும் இதர இயற்கை சூழல்களை விவரிக்கும் வகையில், உள் அலங்காரம் அமைந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில், 1.36 இலட்சம் சதுர மீற்றரில் 1,260 கோடி (இந்திய ரூபாய்) செலவில் சர்வதேச ஒருங்கிணைந்த முனையத்தின் முதல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
புதிய முனையத்தின் வாயிலாக, விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணியரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 2.3 கோடியில் இருந்து, மூன்று கோடி வரை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.