Sportsமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி -...

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி – IPL 2023

-

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது.

மும்பையில் நேற்று இடம்பெற்ற 12-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. ஆரம்ப ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர்.

ரோகித் சர்மா 21 ஓட்டத்தில் அவுட்டானார். இஷான் கிஷன் 31 ஓட்டத்தில் வெளியேறினார்.

கேமரூன் கிரீன் 12 ஓட்டமும், சூர்யகுமார் யாதவ் ஒரு ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர்.

திலக் வர்மா 21 ஓட்டத்தில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி தனது ஆட்டத்தை ஆரம்பித்தது.

தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், கான்வே களமிறங்கினர்.

தொடக்கத்தில் சென்னை அணியின் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரஹானே அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

குறிப்பாக மும்பை அணியின் அர்சத் கான் வீசிய ஓவரில் 1 சிக்ஸ்ர், 4 பவுண்டரி பறக்கவிட்டார். தொடர்ந்து அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து ஆடினார். தொடர்ந்து ஆடிய ரஹானே 27 பந்துகளில் 61 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஷிவம் துபே , ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் நிலைத்து ஆடி ஓட்டம் குவித்தனர்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய துபே 28 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து ராயுடு களமிறங்கி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.

இறுதியில் சென்னை அணி 18.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. ருதுராஜ் 40 ஓட்டங்கள் ராயுடு 20 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்நிலையில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமாக வெற்றிபெற்றது.

நன்றி தமிழன்

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...