$126,000 க்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு வரிச் சலுகையை ரத்து செய்யும் திட்டத்தில் ஆளும் தொழிற்கட்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதனால், நடுத்தர வருமானம் கொண்ட ஒருவருக்கு கிட்டத்தட்ட $1,500 மீதம் கிடைக்காது என்று நம்பப்படுகிறது.
2018 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மால்கம் டர்ன்புல்லின் அரசாங்கம் வாழ்க்கைச் செலவுக்கான நிவாரணமாக இந்த வரிச் சலுகையை அறிமுகப்படுத்தியது.
முந்தைய ஸ்காட் மோரிசன் அரசாங்கமும் கோவிட் காலத்தில் இந்த வரி நிவாரணத்தைத் தொடர்ந்தது.
இருப்பினும், அடுத்த மாதத்திற்கான மத்திய அரசின் பட்ஜெட் ஆவணத்தில் இருந்து இந்த வரி விலக்கு திட்டம் நீக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது வட்டி விகித உயர்வால் பாதிக்கப்படும் மக்களை மேலும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.