மேற்கு ஆஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணித்தியாலத்துக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதோடு, இன்று பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலை அடுத்த 02 நாட்களுக்கு தொடரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கம் காரணமாக, மேற்கு ஆஸ்திரேலியாவின் கரையோரப் பகுதிகளில் கடல் அலைகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.