பூர்வீக மக்கள் பிரதிநிதித்துவத் தீர்மானத்தில் திருத்தம் செய்வதற்கு இன்னும் இடமுள்ளது என்று தொழிலாளர் கட்சி அரசாங்கம் தெரிவிக்கிறது.
இந்த அரசியலமைப்பு திருத்தத்தை அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என பூர்வீக விவகார அமைச்சர் லிண்டா பர்னி வலியுறுத்துகிறார்.
இந்த பிரேரணையை ஆதரிக்கப்போவதில்லை என லிபரல் எதிர்க்கட்சி ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நிழல் அமைச்சரவையின் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிய ஜூலியன் லீசர், தாயக மக்கள் பிரதிநிதித்துவப் பிரேரணைக்கு ஆதரவாக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அண்மையில் இராஜினாமா செய்தார்.