பிரதம மந்திரி Anthony Albanese, ஓய்வுக்கால நிலுவைகளின் மீதான வரிகளை உயர்த்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய பசுமைவாதிகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்தார்.
மத்திய அரசு சமீபத்தில் 2025 முதல் $3 மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதிய இருப்புத் தொகையைக் கொண்ட எவருக்கும் விதிக்கப்படும் வரியை 30 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை செயல்படுத்த முன்மொழிந்தது.
எவ்வாறாயினும், வரி அதிகரிப்பு செய்யப்பட மாட்டாது என கடந்த தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியை இது மீறுவதாக பசுமைக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய வரிகளைச் சுமத்துவதற்குப் பதிலாக $1.9 மில்லியனுக்கும் மேல் ஓய்வூதியக் கணக்கு இருப்பு வைத்திருப்பவர்களுக்கு தற்போதுள்ள அனைத்து வரிச் சலுகைகளையும் குறைக்க வேண்டும் என்பதே அவர்களின் முன்மொழிவு.
செனட்டில் பசுமைக் கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் உள்ளனர் மற்றும் எந்தவொரு முக்கியமான தீர்மானத்தையும் நிறைவேற்ற அவர்களின் ஆதரவு அவசியம்.