கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கம் 05 பில்லியன் டாலர்களை நெருங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற இயற்கை பேரிடர்களால் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
வெள்ளம் காரணமாக விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுரங்கம், சுற்றுலா மற்றும் கட்டுமான தொழில்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் விக்டோரியா – தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்கள் 03 தடவைகள் வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டன.
இதற்கிடையில், கடந்த ஆண்டில் 68 சதவீத ஆஸ்திரேலியர்கள் இயற்கை பேரழிவை எதிர்கொண்டுள்ளனர் என்பதும் இந்த அறிக்கையில் உள்ளது.
எதிர்வரும் மே மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.