மெல்பேர்னில் 30 மணித்தியாலங்களுக்கு மேலாக விமான சேவை தாமதமானது தொடர்பில் அவுஸ்திரேலியாவிலுள்ள தனது அதிகாரிகளிடம் அறிக்கை கோருவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
மெல்போர்ன் விமான நிலையத்தில் சிரமத்திற்கு உள்ளான பயணிகளை சிறந்த முறையில் தங்கவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் அறிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தின் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தமது முன்னுரிமையாக இருந்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 15ஆம் திகதி, கடந்த சனிக்கிழமை மெல்பேர்ன் நேரப்படி மாலை 4.10 மணியளவில், கொழும்பு செல்லவிருந்த இலங்கை விமானம் எதிர்பாராதவிதமாக விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாமதமானது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பொறுப்பான அதிகாரிகள் யாரும் நிலைமையை ஆராய வரவில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏறக்குறைய 30 மணி நேரம் தாமதமான ஸ்ரீலங்கன் விமானம் 218 பயணிகளுடன் இலங்கை நேரப்படி காலை 7.40 மணியளவில் கட்டுநாயக்கவில் தரையிறங்கியது.