மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் அறைகளின் கதவுகளை பூட்டி வைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என குயின்ஸ்லாந்து மாநில அரசிடம் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குயின்ஸ்லாந்து மட்டுமே இத்தகைய முறையை நடைமுறைப்படுத்துகிறது, இது மிகவும் மனிதாபிமானமற்றது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கடுமையான நடைமுறை மனித உரிமைச் சட்டங்களைக் கூட மீறுவதாக பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது நோயாளிகளையும் கைதிகளையும் ஒரே மாதிரியாக நடத்தும் விதத்தில் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் கருத்தை கருத்தில் கொண்டு குயின்ஸ்லாந்து மாநில அரசு இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர்.