நலன்புரி கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்படும் தொகையை 34 பில்லியன் டாலர்கள் உயர்த்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள மத்திய பட்ஜெட் ஆவணத்தால், வேலை தேடுபவர், ஓய்வூதியம் உள்ளிட்ட பல கொடுப்பனவுகளுக்கு வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு 37 பரிந்துரைகளுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால் 02 வாரங்களுக்கான உதவித்தொகை 840 டொலர்களாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் 90 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
ஆனால், இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை இறுதி முடிவு எடுக்காததால், அடுத்த மாதம் நடைபெற உள்ள மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.