News14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி- IPL...

14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி- IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக அணித்தலைவர் ரோகித் சர்மா 28 ஓட்டங்கள், இஷான் கிஷன் 38 ஓட்டங்கள் சேர்த்தனர்.

அதன்பின் களமிறங்கிய கேமரான் கிரீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டம் குவித்தார். மறுமுனையில் சூரியகுமார் யாதவ் 7 ஒட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அவரைத் தொடர்ந்து கேமரான் கிரீனுடன் இணைந்த திலக் வர்மா, ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

17 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 37 ஓட்டங்கள் விளாசிய நிலையில் அவர் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 16 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

மறுமுனையில் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்த கேமரான் கிரீன் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள் சேர்க்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் சேர்த்தது.

ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சென் 2 விக்கெட் எடுத்தார். புவனேஸ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

இதில் அதிகபட்சமாக மாயங்க் அகர்வால் 48 ஓட்டங்கள் எடுத்தார். தொடர்ந்து ஹெயின்ரிச் கிளாசன் 36 ஓட்டங்களும், எய்டன் மார்க்ரம் 22 ஓட்டங்களும், மார்கோ ஜான்சென் 13 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ஓட்டங்களும், ராகுல் திரிபாதி 7 ஓட்டத்துடனும், அபிஷேக் சர்மா ஒரு ஒட்டமும் எடுத்தனர்.

இறுதியாக அப்துல் சமாத் 9 ஓட்டம் எடுத்து ரன் அவுட் ஆனார். இவருக்கு அடுத்ததாக மயங்க் மார்கண்டே 2 ஓட்டங்களும், புவனேஸ்வர் குமுர் 2 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆட்டத்தின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 178 ஒட்டங்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றியடைந்துள்ளது.

Latest news

வேலைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி நடத்தப்படும் ஆராய்ச்சி

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடைபெற்று வருகிறது. சமீபத்திய அரசாங்க அறிக்கை ஒன்று, AI தொழில்நுட்பம்...

ஆஸ்திரேலியாவில் உயர்ந்துள்ள நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவின் நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முக்கிய ஏற்றுமதியாளர் அமெரிக்கா, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு தங்க ஏற்றுமதி $2.9 பில்லியன்...

கடல் குதிரைகளை உயிர்ப்பிக்க புதிய திட்டம்

1,200க்கும் மேற்பட்ட பூர்வீக கடல் குதிரைகள் கடலோரப் பகுதிகளில் விடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடுமையான பேரழிவுகள் காரணமாக, இந்த பூர்வீக கடல்...

அரை மணி நேரத்தில் $500 சம்பாதிக்க ஒரு ஆஸ்திரேலியரிடமிருந்து ஒரு புதிய வழி

ஒரு ஆஸ்திரேலியர் புதிய கண்டுபிடிப்பு மூலம் 30 நிமிடங்களில் 500 டாலர் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Matt Carpenter சமீபத்தில் பல்வேறு கடைகளில் வாங்கிய பழைய பொருட்களை ஆன்லைனில்...

ஆஸ்திரேலியாவில் உயர்ந்துள்ள நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவின் நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முக்கிய ஏற்றுமதியாளர் அமெரிக்கா, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு தங்க ஏற்றுமதி $2.9 பில்லியன்...

மெல்பேர்ணில் 11 முறை கத்தியால் குத்தப்பட்ட நபர் – மூன்று பேர் மீது குற்றம்

மெல்பேர்ண் Kew Eastல் உள்ள தனது வீட்டிற்குள் நுழைந்த ஒரு கும்பலை எதிர்த்துப் போராட முயன்றபோது தந்தை ஒருவர் அரிவாளால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 39 வயதுடைய...