ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இன்று சூரிய கிரகணத்தை காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு பிராந்தியத்தில் உள்ள சில நகரங்களில் சிறப்பாகக் காணப்படும்.
1974ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவில் முழு சூரிய கிரகணம் தென்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
சூரிய கிரகணம் மேற்கு ஆஸ்திரேலியா நேரப்படி காலை 11.27 மணிக்கு உச்சத்தில் இருக்கும், விக்டோரியா உள்ளிட்ட பிற மாநிலங்கள் பிற்பகல் 01.27 மணிக்கு அதைக் காண முடியும்.
இருப்பினும், கிழக்கு மாநிலங்களுக்கு, இந்த சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக தோன்றும்.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலங்கள் மீண்டும் ஒரு தெளிவான சூரிய கிரகணத்தை 2028 இல் காண முடியும்.