Newsகனடாவில் அரசாங்க ஊழியர்கள் போராட்டம்

கனடாவில் அரசாங்க ஊழியர்கள் போராட்டம்

-

கனடாவில் அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அரசாங்க தொழிற்சங்கமான மத்திய பொதுத்துறை தொழிற்சங்கம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த தீர்மானம் அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த காரணத்தினால் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சங்கத்தில் சுமார் 155000 ஊழியர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பமாகும் என தொழிற்சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நாட்டின் 250 இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டம் சம்பள உயர்வு, தொழில் ஒப்பந்தம் உள்ளிட்ட சில விடயங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

போராட்டத்தில் குதித்துள்ள ஊழியர்களில் கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் 35000 பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

போராட்டம் முன்னெடுக்கப்படும் காலப் பகுதியிலும் பேச்சுவார்த்தைகளை தொடர உத்தேசித்துள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Latest news

Centrelink கட்டணங்களில் மாற்றம்

சர்வீசஸ் ஆஸ்திரேலியா வரும் டிசம்பரில் இருந்து சென்டர்லிங்க் கடன் திருப்பிச் செலுத்தும் முறைகளில் பல முக்கிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வெளிநாட்டு நாணய...

இறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

உலகில் நூற்றுக்கணக்கான தீவுகளில் மனிதனின் காலடி சுவடு படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சாதாரண நிலப்பரப்பை விடவும் கடலும், நிலமும் சேர்ந்து காணப்படும் தீவுகளில் பல...

ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கானோருக்கு வேலை

சுமார் 10 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் முழுநேர வேலைவாய்ப்பைக் கண்டுள்ளனர், இது ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் முதல் முறையாக குறைந்த வேலையின்மை விகிதத்தை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் கிறிஸ்மஸ்...

ஆஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய திட்டம்

புதிய ஆராய்ச்சியின் படி, ஒவ்வொரு ஆண்டும் தூக்கி எறியப்படும் ஆயிரக்கணக்கான இரத்த பைகள் உயிர்களைக் காப்பாற்றத் திசைதிருப்பப்படலாம். நன்கொடையாளர்களிடமிருந்து கைவிடப்படும் இரத்தம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி...

ஆஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய திட்டம்

புதிய ஆராய்ச்சியின் படி, ஒவ்வொரு ஆண்டும் தூக்கி எறியப்படும் ஆயிரக்கணக்கான இரத்த பைகள் உயிர்களைக் காப்பாற்றத் திசைதிருப்பப்படலாம். நன்கொடையாளர்களிடமிருந்து கைவிடப்படும் இரத்தம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி...

ஆஸ்திரேலியாவில் ஒரு மாநிலத்திற்கு 100 இலவச குழந்தை பராமரிப்பு மையங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்தால் கட்டப்படும் என உறுதியளிக்கப்பட்ட 100 குழந்தை பராமரிப்பு மையங்களில் முதலாவது மையம் திறக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் தந்தை இருவரும் பணிபுரியும்...