ஆஸ்திரேலிய முதலாளிகளில் 71 சதவீதம் பேர் 4 நாள் வேலை வாரத்தை ஆதரிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அவர்களில் 34 சதவீதம் பேர் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்தை பின்பற்றுவோம் என்று கூறியுள்ளனர்.
மேலும் 37 சதவீதம் பேர் எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் இதை அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளனர்.
ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் சம்பளக் குறைப்பு எதுவுமின்றி வாரத்தின் 04 நாள் வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டது.
சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 28 சதவீதம் பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இது வெற்றியடையாது என்று தெரிவித்தனர்.
நியூசிலாந்து, கிரேட் பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல நாடுகள் ஏற்கனவே 04 நாள் வேலை வாரத்தை பரிசோதிக்கத் தொடங்கியுள்ளன.