ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தயம் ஆகியவற்றில் அதிகம் பேர் பார்வையிடும் இடமாக ஆஸ்திரேலியா இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரங்களில் அதிகம் ஈர்க்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும், ஆஸ்திரேலியர்கள் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தயம் மூலம் கிட்டத்தட்ட $25 பில்லியன் இழந்துள்ளனர்.
சமூக வலைதளங்கள் மூலம் பந்தயம் கட்டும் பிரச்சாரங்களை தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் மட்டும் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டும் நிறுவனங்கள் விளம்பரத்திற்காக $287 மில்லியன் செலவிட்டுள்ளன.