நியூ சவுத் வேல்ஸ் லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கு மார்க் ஸ்பீக்மேன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற மாநிலத் தேர்தலில் லிபரல் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, அக்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து டொமினிக் பெரோட் ராஜினாமா செய்தார்.
அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் லிபரல் கட்சிக்கு கிட்டத்தட்ட ஒரு மாதமாக தலைவர் இல்லை.
63 வயதான மார்க் ஸ்பீக்மேன் மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றுவார்.