வேற்றுகிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை என்ற போதிலும் அடையாளம் தெரியாமல் பறக்கும் பொருட்கள் தொடர்பான 650 வழக்குகளை விசாரணை செய்து வருவதாக அமெரிக்காவின் இராணுவ மையம் பென்டகன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பென்டகன் அதிகாரி சீன்கிர்க்பேட்ரிக் மேலும் தெரிவிக்கையில்,
வேற்றுகிரகவாசிகள் தொடர்பாக எந்த ஒரு வலுவான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
அதேவேளை, வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஏதேனும் நம்பகத்தன்மை உடைய ஆதாரங்கள் கிடைத்தால் மக்கள் அதனை பென்டகனுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என சீன் கிர்க்பேட்ரிக் கேட்டுகொண்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் எல்லாம் அறிவியல் சான்றுகள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி தமிழன்